கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலர்களை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் நலம் விசாரிப்பு.
கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏடிஎம்களில் கொள்ளை அடித்து விட்டு கண்டெய்னர் லாரி மூலம் 7 வடமாநில கொள்ளையர்கள் தப்பி செல்ல முயன்ற போது நாமக்கல் மாவட்டம் வெப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.அப்போது குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் காவலர் ரஞ்சித் ஆகியோரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற நிலையில் இருவரை துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.மற்றொருவர் இரு கால்களின் சுட்டதில் படுகாயம் அடைந்து தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கண்டெய்னர் லாரியில் இருந்து சுமார் 67 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 5 கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மார்பு பகுதியில் மற்றும் காவலர் ரஞ்சித்துக்கு கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.காவலர்கள் இருவரும் தற்போது சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் படுகாயம் அடைந்தவர்களை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து வருகிறார்...
Tags : கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலர்களை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் நலம் விசாரிப்பு.