பிரதமரின் திருப்பூர் வருகை ஒத்திவைப்பு
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை புாிந்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் ரூ. 19,850 கோடிக்கு மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, இத்துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து, தமிழகத்தில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவிற்கு ஜனவரி19-ம்தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளதாகவும். அதனை தொடர்ந்து திருப்பூர். இ..எஸ்..ஐ. மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில்,, பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.
Tags :