நீட் பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை

by Staff / 29-04-2024 04:06:25pm
நீட் பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை

ராஜஸ்தானின் கோட்டாவில் மாணவர்களின் தற்கொலை தொடர்கிறது. ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை சேர்ந்த சுமித் (20) என்ற இளைஞர் நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இவர் கடந்த ஒரு வருடமாக கோட்டா குன்ஹாடி லேண்ட்மார்க் நகரில் உள்ள விடுதியில் தங்கி உள்ளூர் தனியார் மையத்தில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo