“மோடி அரசைக் காப்பாற்றும் பட்ஜெட்"மல்லிகார்ஜுன கார்கே

by Staff / 23-07-2024 04:03:01pm
“மோடி அரசைக் காப்பாற்றும் பட்ஜெட்

தனது அரசை காப்பாற்ற வேண்டும் என்று ஒன்றிய பட்ஜெட்டை தயாரித்துள்ளனர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மேலும் அவர், “மோடி அரசின் “காப்பிகேட் பட்ஜெட்” காங்கிரஸின் நீதி அஜெண்டாவைக்கூட சரியாக காப்பி செய்ய முடியவில்லை. மோடி அரசாங்கத்தின் பட்ஜெட், அதன் கூட்டணிக் கட்சிகளை ஏமாற்ற அரைவேக்காடு “மந்தைகள்” விநியோகம் செய்துள்லது. இதனால், தேசிய ஜனநாயக கூட்டணி பிழைத்து வருகிறது. இது “நாட்டின் முன்னேற்றத்திற்கான” பட்ஜெட் அல்ல, “மோடி அரசைக் காப்பாற்றும் பட்ஜெட்" என காட்டமாக விமர்சித்துள்ளார்.
 

 

Tags :

Share via