குப்பையில் கொட்டப்பட்ட சத்து டானிக் பாட்டில்கள்

by Staff / 12-09-2023 02:48:21pm
குப்பையில் கொட்டப்பட்ட சத்து டானிக் பாட்டில்கள்

தஞ்சையில் ஒரு குப்பை தொட்டியில் அரசால் வழங்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்து பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள குப்பைத்தொட்டியில் 200 சத்து டானிக் பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளன. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு சத்து டானிக் வழங்காததால் மருந்துகள் கடந்த ஆகஸ்ட் மாதம் காலாவதி ஆகியுள்ளது. கர்ப்பிணிகளுக்கு வழங்காமல் சத்துட்டானிக் மருந்துகளை வீணாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை யார் கொட்டினார்கள் ? என்பது குறித்து கேள்வியும் எழுந்து வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo