ஆஸ்திரேலியாவை திணறடிக்கும் டெல்டா வகை கரோனா

ஆஸ்திரேலியாவை திணறடிக்கும் டெல்டா வகை கரோனா
ஊரடங்கு விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய ராணுவ வீரர்கள் உதவிக்கு அழைக்கப்படலாம் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் டெல்டா வகை கரோனா தீவிரமாக பரவிவருகிறது. இந்நிலையில், சிட்னியில் ஊரடங்கு விதிகள் முறையாக பின்பற்றகிறதா என்பதை உறுதி செய்ய ராணுவ வீரர்கள் அழைக்கப்படலாம் என நியூ செளத் வேல்ஸ் அரசு இன்று (வியாழன்கிழமை) தெரிவித்துள்ளது
சிட்னிக்கு தென்கிழக்கில் 260 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஆஸ்திரேலியாவின் தலைநகரான கேன்பராவில் திடீரென ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒர் ஆண்டுக்கு பிறகு, உள்ளூர்வாசி ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் டெல்டா வகை கரோனா வேகமாக பரவிவரும் நிலையில், நாட்டின் பெருநகரங்களான சிட்னி மற்றும் மெல்போர்னில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சிட்னியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து நியூ செளத் வேல்ஸ் மாநில பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், "தேவைப்படும் பட்சத்தில் ராணுவ வீரர்களின் உதவியை நாட அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என்றார்.
Tags :