திருவண்ணாமலை:மீன்பிடிக்கச் சென்ற அண்ணன் தம்பி ஏரியில் மூழ்கி பலி.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருந்ததி பாளையத்தை சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி முனியம்மாள் இவர்களின் மகன்கள் யுவராஜ் வயது 14, 9 ம் வகுப்புபடிக்கிறார், இவருடைய தம்பி திசாந்த் வயது 8, 3ம் வகுப்பு படிக்கிறார்
இவர்கள் இருவரும் வீட்டின் அருகில் உள்ள சேத்துப்பட்டு ஏறியின் மீன்பிடிக்க சென்றனர் மீன் பிடிக்கும் போது நீரில் மூழ்கிஅண்ணன் தம்பி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : திருவண்ணாமலை:மீன்பிடிக்கச் சென்ற அண்ணன் தம்பி ஏரியில் மூழ்கி பலி.