சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கலாமா- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.

by Editor / 21-10-2024 10:50:38pm
சீமான்  தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கலாமா- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜனசக்தி சந்தா கணக்கு முடிக்கும் சிறப்பு கூட்டம் திருவாரூர் நாகை புறவழிச்சாலையில் உள்ள வர்த்தக சங்க மண்டபத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் கூறியதாவது.

 

நாம் தமிழர் கட்சி தலைவர் நண்பர் சீமான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த் தாய் வாழ்த்தை மாற்றி அமைப்போம் என்று சொல்கிறார்.அதில் ஒன்றும் தவறில்லை ஆனால் நான் இப்போது சீமானிடம் கேட்பது இப்போது இருக்கின்ற தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கலாமா.சீமான் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தை மாத்தட்டும் இல்லை அரசியல் சட்டத்தையே மாற்றட்டும் அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.அது அன்றைக்கு.இன்று நடைமுறையில் தேசிய கீதம் இருக்கிறது தமிழ் தாய் வாழ்த்து என்று இருக்கிறது குறிப்பாக அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் இவை இரண்டும் பாடப்பட வேண்டும் அதற்கு எல்லோரும் உரிய மரியாதை அளிக்க வேண்டும்.அந்த உரிய மரியாதையை அளிக்கவில்லை என்பதுதானே பிரச்சனை அதைப் பற்றி சீமான் என்ன சொல்கிறார்.இப்போதைக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கலாமா அதில் உள்ள வரிகளை மாற்றி பாடலாமா அது கூடாது என்பதுதான்.

சிஐடியு தொழிற்சங்கம் பொதுமக்கள் பிரச்சினை பற்றி கவலைப்படவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் கூறியது குறித்த கேள்விக்கு சிஐடியு தொழிற்சங்கம் மட்டுமல்ல ஏஐடிசியுவாக இருந்தாலும் தொமுச வாக இருந்தாலும் அனைத்து சங்கங்களுமே தொழிலாளர் நலன் மட்டுமின்றி பொதுமக்களும் நலனையும் கருத்தில் கொண்டு தான் போராடி வருகிறது.வயநாடு தொகுதியில் காங்கிரஸை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது குறித்த கேள்விக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வய நாட்டில் கண்டிப்பாக போட்டியிடும் வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சியை அங்கு வாபஸ் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள்.இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு காங்கிரசை எதிர்த்து போட்டியிடலாமா என்று கேட்பதற்கு பதில் உங்களால் முடிந்தால் காங்கிரஸ் வேட்பாளரை வாபஸ் வாங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்.

திமுக கூட்டணி கட்சியில் புகைச்சல் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்த கேள்விக்கு அண்ணா திமுகவில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது அதை முதலில் அனைக்க சொல்லுங்கள்.ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தென்னிந்திய மாநிலங்களில் குழந்தைகள் அதிகமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியது குறித்த கேள்விக்கு ஆந்திர முதலமைச்சர் சொல்கிற கருத்து அறிவுபூர்வமான கருத்தாக தெரியவில்லை.அதாவது நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது நீண்ட காலமாக பின்பற்றி வரக்கூடிய ஒரு முறை. சீனாவிலேயே அந்த முறையை கையாளுகிறார்கள்.சீனா தான் உலகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இப்போது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா.இதில் நாம் உலகத்தையே ஜெயித்து விட்டோம்.அது ஒரு வகையில் சந்தோஷம் தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.அப்படி மக்கள் தொகை இருக்கும்போது முதியோர்கள் அதிகமாகி கொண்டு இருக்கிறார்கள் அதனால் நிறைய குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் மூன்று குழந்தை பெற்றவர்களுக்கு தான் உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு கொடுக்க முடியும் என்று முதலமைச்சர் சொல்கிறார். முதலமைச்சர் இதுபோன்ற கருத்துக்களை பேசும்போது நிதானமாக பேச வேண்டும்.லட்டில் மாட்டுக் கொழுப்பு இருக்கிறது என்று கூறினாரே வெங்கடாஜலபதிக்கு படைப்பது தானே லட்டு வெங்கடாஜலபதி எந்த புகாரும் கொடுக்கவில்லை.இந்த லட்டினால் வெங்கடாஜலபதிக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டது என்று எந்த மருத்துவமனையிலும் சேர்ந்ததாக புகார் இல்லை.அவர் புகார் கொடுக்கவில்லை.அதை வாங்கி சாப்பிட்ட பக்தர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.அவர் பாட்டுக்கு அடித்துவிட்டார்.முந்தைய ஆட்சியில் லட்டில் மாட்டுக் கொழுப்பு பன்றி கொழுப்பு மீன் கொழுப்பு கலந்து இருக்கிறார்கள் என்று இன்னொரு அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு வைப்பதாக நினைத்துக் கொண்டு கூறியதை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்து இருக்கிறது. அவரது வேலை என்ன ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது நிறைய வாக்குறுதி கொடுத்திருக்கிறார் அதை நிறைவேற்ற பார்ப்பதை விட்டுவிட்டு லட்டில் கொழுப்பு இருக்கிறது அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசுவது அவர் ஒரு சாதாரண மனிதரல்ல முதலமைச்சர் யோசித்துப் பேச வேண்டும்.  என்று அவர் பேசினார்.

 

Tags : சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கலாமா- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.

Share via