மாரடைப்பால் உயிரிழந்த ராணுவ வீரர்

இந்திய ராணுவ வீரர் சோலங்கி சதம் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். தெலுங்கானாவில் உள்ள ஆதிலாபாத் மாவட்டம் நெரடிகொண்டா மண்டலத்தில் கிஷ்தாபூர் கிராமத்தைச் சேர்ந்த சோலங்கி சதம், கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் ஜிடியாக பணியாற்றி வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சக ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி இந்திய ராணுவ வீரர் சோலங்கி சதம் இன்று உயிரிழந்தார்.
Tags :