"குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா...ஜெகதீப் டேங்கர் கடும் கண்டனம்

உச்சநீதிமன்றத்துக்கு குடியரசு துணை தலைவர் ஜெகதீப் டேங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் குடியரசு தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?. மசோதா குறிப்பிட்ட காலத்தில் ஒப்புதல் பெறவில்லை என்றால், நீதிமன்றம் அதனை சட்டமாக அமல்படுத்துகிறது. நாடாளுமன்ற வேலையை நீதிபதிகள் செய்கிறார்கள். நாட்டின் சட்டம் நீதிபதிகளுக்கு பொருந்தாதா? இந்திய அரசியலமைப்பு சட்டம் 142 மீறப்படுகிறதா?” என கேள்விகள் எழுப்பியுள்ளார்.
Tags :