இலங்கையில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 150 க்கு மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்
டிட்வா புயல் தாக்கத்தால் இலங்கையில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 150 க்கு மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 200 மேல் காணாமல் போய் உள்ளனர். ஒரு கிராமமே நீரில் மூழ்கி காணாமல் போய் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சுமார் 44 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ரோடுகளில் விழுந்து கிடக்கின்ற மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். புயல் சேதம் கடுமையாக இருப்பதால் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
Tags :



















