கொரோனா உயிரிழப்பு - தவறான தகவல் பரப்பப்படுகிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 10-06-2025 02:30:29pm
கொரோனா உயிரிழப்பு - தவறான தகவல் பரப்பப்படுகிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா உயிரிழப்பு குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், "இந்திய அளவிலும், தமிழகத்திலும் தற்போது வரை கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை. இணை நோயால் மட்டுமே உயிரிழந்துள்ளனர். பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை. இணை நோய் உள்ளவர்கள் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via