நெல்லையில் சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக பிரமுகர் ஒ ட்டிய போஸ்டர் 

by Editor / 16-06-2021 08:21:23pm
நெல்லையில் சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக பிரமுகர் ஒ ட்டிய போஸ்டர் 

 

அ.தி.மு.க. தொண்டர்களிடம் சசிகலா செல்போனில் பேசிய ஆடியோ கடந்த சில நாட்களாக வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சசிகலாவுடன் பேசிய 14 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில்  நெல்லை மற்றும் பாளை பகுதியில் சசிகலாவுக்கு ஆதரவாக ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அந்த போஸ்டர்களில், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் படம் மட்டுமே பெரிய அளவில் இடம் பெற்றுள்ளது.
அதில் ‘தாயே வா, தலைமை ஏற்க வா, தள்ளாடும் கழகத்தை தலைநிமிர்த்த வா, தொண்டர்களின் துயர் துடைக்க வா’ என்ற வாசகங்கள் உள்ளது.இந்த போஸ்டரை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் வழக்கறிஞர் பிரிவு தலைவர் வெளியிட்டதாக பெயர் இடம்பெற்றுள்ளது.
நெல்லை மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்த பகுதியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் தலைமை கழக நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். 

 

Tags :

Share via
Logo