by Editor /
29-06-2023
09:36:36am
மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வன்முறை வெடித்து மாநிலமே அமைதி இழந்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் செல்கிறார். இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள மறுவாழ்வு மையங்களை ராகுல் பார்வையிடுகிறார். மேலும், கலவரம் நடந்த பகுதிகளில் ராகுல் ஆய்வு நடத்துவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், மே மாதம் வன்முறை வெடித்த பிறகு ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்திற்கு வருவது இதுவே முதல் முறை. மெய்தி சமூக இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக இரு சமூக மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது.
<br />
Tags :
Share via