by Editor /
29-06-2023
11:36:02am
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக வந்து சினிமா பார்த்தனர்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் சேலத்தில் இன்று காலை ரிலீஸ் ஆனது .
இதனை ஒட்டிஉதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 5 தியேட்டர் வரை ஊர்வலமாக வந்தனர் .இதில் தாரை தப்பட்டை மற்றும் மயிலாட்டம், புலியாட்டம் நடந்தது.
சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஊர்வலமாக மாமன்னன் திரையிடப்பட்டுள்ள தியேட்டருக்கு வந்தனர்.பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சினிமா பார்க்க சென்றனர்.இந்த ஊர்வலத்தால் சேலம் 5 தியேட்டர் பகுதி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Tags :
Share via