மணிப்பூரில் குண்டுவெடிப்பு- 2 பேர் பலி
5 மாநில சட்டசபைத் தேர்தலில் உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகியவற்றுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்து விட்டது. உத்தரபிரதேச மாநிலத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இன்று 5-வது கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.
60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. அடுத்த கட்டமாக மார்ச் 5-ந் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் மணிப்பூரில் குண்டுவெடித்துள்ளது. தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் குண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள சர்ச்சந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கேங்க் பிமுல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் 6 வயதான மங்மின் லால், 22 வயதான லாங்இன்சாங் ஆகிய 2 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். 5 பேர் காயத்துடன் கிசிச்சை பெற்று வருகின்றனர்.
மணிப்பூர் மாநிலத்துக்கு கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும்.
Tags :