இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

by Staff / 14-01-2023 12:19:17pm
இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சனிக்கிழமை அதிகாலை 5:17 மணிக்கு பூமி அதிர்ந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் தீவிரம் 3.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் தர்மசாலாவில் இருந்து 76 கி.மீ தொலைவில் உள்ளது தெரியவந்துள்ளது. பூமியின் உள்பகுதியில் 5 கி.மீ ஆழத்தில் அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via