பாட்டியை கொலை செய்த பேரன்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மேலைகாட்டுவிளை சாரூர் பகுதியைச் சேர்ந்த தாசம்மாள் (80) என்ற மூதாட்டி தனது மகன் புஷ்பராஜ் மற்றும் மருமகளுடன் வாழ்ந்து வந்தார். புஷ்பராஜ் உயிரிழந்த நிலையில், அவரது இளைய மகன் அஜித் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். அஜித் தினமும் குடித்துவிட்டு வந்து பாட்டியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நண்பனுடன் மது அருந்திவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் காலை நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து பார்க்குபொழுது பாட்டி சடலமாகவும் பேரன் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.
Tags :