கேரளாவில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் தற்கொலை.

கேரளாவின் கண்ணூரில் ஒரு வீட்டிற்குள் மூன்று குழந்தைகள் உட்பட 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். செருப்புழாவை சேர்ந்த ஸ்ரீஜா, அவரது நண்பர் ஷாஜி மற்றும் மூன்று குழந்தைகள் சூரஜ், சுரபி, சுஜித் ஆகியோர் உயிரிழந்தனர். ஸ்ரீஜாவும், ஷாஜியும் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். குழந்தைகளை கொன்றுவிட்டு ஸ்ரீஜாவும், ஷாஜியும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இருப்பினும், அவர்களின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :