காலில் விழுந்தாவதுகுழந்தைங்களை படிக்கவைப்பேன்-உதவி ஆய்வாளர் உணர்ச்சி பொங்கும் வீடியோ

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பெண்ணாலூர் பேட்டை அருகே உள்ள திடீர்நகர் என்ற பகுதியில் 50 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்,இந்நிலையில் 11 பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் பரமசிவம்அந்த கிராமத்திற்கு சென்று மாணவர்களின் பெற்றோரிடம் தாம் யார்காலில் விழுந்தாவது தங்கள் பிள்ளைகளை காவல்துறை (தங்கள்)படிக்க வைக்கிறோம்,தங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் 24 மணி நேரமாக காவல் நிலைய கதவு திறந்தே வைத்திருக்கும் எங்களை வந்து அணுகுங்கள்,அரசின் சார்பில் மாணவர்களுக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் இலவச ஊட்டச்சத்து மிகுந்த பொருட்கள் வழங்கப்படுகிறது, கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது, எனக்கூறி மாணவர்களின் பெற்றோரிடம் மன்றாடி 11 மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப செய்துள்ளார்,இதனிடையே மாணவர்களின் பெற்றோரிடம் உதவி ஆய்வாளர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.அந்த வீடியோவில் அரசு மாணவர்களையும் கல்வி பயிலவைக்க எவ்வளவு சலுகைகளை செய்கிறது என்பது குறித்து அவர் பேசும் காட்சிகள் மக்களிடமிருந்து அவருக்கு பாராட்டுகுவிந்து வருகிறது.
Tags :