சீனா கட்டும் பாலம் இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது மத்திய அரசு

by Admin / 05-02-2022 04:14:34pm
 சீனா கட்டும் பாலம்  இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது மத்திய அரசு

பாங்காங் ஏரியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் சீனாவால் கட்டப்பட்டு வரும் பாலத்தை அரசு ஒரு போதும் ஏற்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. 

1962ஆம் ஆண்டில் இருந்து சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியில் சீனாவால் கட்டப்பட்டு வரும் பாலத்தை அரசு கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்திய அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனவும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மற்ற நாடுகள் மதிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பாலம் கட்டுவதன் மூலம் சீனா தனது படைகளையும், ஆயுதங்களையும், நவீன பீரங்கிகளையும் எளிதாகவும், விரைவாகவும் இந்திய எல்லைக்கு அருகே நிலைநிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via