யானை தந்த வழக்கு: நடிகர் மோகன்லாலுக்கு சிக்கல்
யானை தந்தம் வைத்திருந்த வழக்கில் நடிகர் மோகன்லால் மற்றும் பிற குற்றவாளிகள் நவம்பர் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களின் கோரிக்கை பொது நலனுக்கு எதிரானது எனக் கூறி வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற அரசின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2011ஆம் ஆண்டு எர்ணாகுளத்தில் உள்ள மோகன்லாலின் வீட்டில் நான்கு தந்தங்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் நடந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
Tags :



















