நிர்வாண வீடியோ கால் செய்ய வற்புறுத்துவதாக மனைவி புகார்

by Staff / 18-08-2023 02:47:41pm
நிர்வாண வீடியோ கால் செய்ய வற்புறுத்துவதாக மனைவி புகார்

தன்னை உடல்ரீதியாக தாக்கி நிர்வாண வீடியோ கால் செய்ய வற்புறுத்தியதாக கணவர் மீது கேரளாவின் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் போலீசில் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். 20 வயதுடைய இளம்பெண் இவரது கணவர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின்படி, கணவர் சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு தன்னை நிர்வாணமாக அவர்களுக்கு வீடியோ கால் செய்ய வற்புறுத்தியதாக கூறியுள்ளார். இதற்காக தன்னை மிரட்டி தாக்கியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அந்த நபர் மீது நீலேஸ்வரம் போலீசார் குடும்ப துஷ்பிரயோக வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

 

Tags :

Share via