பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தம்பதியினர் கைது-நிறுவனங்களில் சோதனை .

by Editor / 27-08-2022 10:28:52pm
பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தம்பதியினர் கைது-நிறுவனங்களில் சோதனை .

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மற்றும் அவரது மனைவி சாரதா ஆகிய இருவரும் ஸ்பைசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆகாஷ் ஸ்ருதி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற இரு நிதி நிறுவனங்களை தொடங்கி நடத்தி வந்தனர்.

அதிக வட்டி மற்றும் அதிக ஊக்க தொகை தருவதாக கூறியதால் ஏராளமானோர் நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த வாடிக்கையாளர்களும் கர்நாடகா, கேரள, தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் இதே போன்று பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

பணம் வாங்கும் போது இவர்கள் கூறியபடி சில மாதங்கள் மட்டுமே இந்த தம்பதியினர் பணம் வழங்கிய நிலையில் இருவரும் தலைமறைவாகினர். இது குறித்து கோவை பொருளாதார குற்ற பிரிவு காவல் நிலையத்தில் 66 க்கும் மேற்பட்டோர் மோசடி புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் குற்றவாளிகள் தலைமறைவாகினர். இந்நிலையில் பொருளாதார குற்ற பிரிவு போலீசார் தலைமறைவான தம்பதியை கைது செய்தனர்.

இந்நிலையில் மேல் கூடலூரில் பகுதியில் உள்ள வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் தம்பதியினருக்கு சொந்தமான இடங்களில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலிசார் நான்கு குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் கம்ப்யூட்டர் ஹார்ட்  டிஸ்க்குகள், காசோலைகள், உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via