குமரியில் மக்களை அச்சுறுத்தியபுலி  பிடிப்பட்டது.

by Editor / 10-08-2023 09:58:35am
குமரியில் மக்களை அச்சுறுத்தியபுலி  பிடிப்பட்டது.

குமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான சிற்றார் குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக புலி நடமாட்டம் இருந்ததை தொடர்ந்து அங்குள்ள கால்நடைகளையும் வேட்டையாடி வந்தது. இதை அடுத்து பொதுமக்களின் கோரிக்கையின் பெயரில் வனத்துறையினரும் சிறப்பு படையினரும் வரவழைக்கப்பட்டு புலியை பிடிக்க தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில் ஒரு சில நாட்களாக புலியின் நடமாட்டம் இல்லாததை தொடர்ந்து வனத்துறையினர் புலியை தேடும் பணியை நடத்தி வந்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் பத்துகாணி பகுதியை அடுத்த ஒரு நூறாம் பகுதியில் 4 ஆடுகளை திடீரென புலி தாக்கியது , தொடர்ந்து வனத்துறையினர் புலியை பிடிப்பதற்காக கூண்டுகளை அமைத்திருந்தனர். மேலும் சிறப்பு படைகளும் வரவழைக்கப்பட்டு தொடர் தீவிர வேட்டை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் காட்டில் சுற்றித் திரிந்த புலியை நேற்று மாலை மயக்க ஊசி செலுத்தி சிறப்பு படையினர் பிடித்தனர். பின்னர் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் இன்று காலை காட்டு பகுதியில் இருந்து வெளியே கொண்டு வந்த வனத்துறையினர். அங்கிருந்து கூண்டு வண்டி மூலம் வண்டலூர் சரணாலயத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

 

Tags : குமரியில் மக்களை அச்சுறுத்தியபுலி  பிடிப்பட்டது.

Share via