கார்கேவை சந்தித்த அழகிரி

by Staff / 01-12-2023 05:37:42pm
கார்கேவை சந்தித்த அழகிரி

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில், திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி வாய்ப்பு, தமிழகத்தின் அரசியல் களம் எப்படி உள்ளது. காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாடுகள், உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கியமாக தமிழகத்தில் போட்டியிட கேட்க போகும் சீட்டுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.தேர்தல் வெற்றிக்காக அனைவரும் கட்சிப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கார்கே அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo