தீபாவளி அதிகாலையில் சிட்டாக பறந்து பஸ் மோதி பலியான ஜோடி -காவல்துறை விசாரணை

by Editor / 25-10-2022 09:25:53pm
தீபாவளி அதிகாலையில் சிட்டாக பறந்து பஸ் மோதி பலியான ஜோடி -காவல்துறை விசாரணை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மங்களாபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் இவரது மனைவி அகிலா (19).திருமலைக்கோவில் அடிவாரம் பகுதியை சேர்ந்தஅகிலாவுக்கும்,விக்னேஷ்க்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.இதில் இந்த தம்பதியினருக்கு 1வயதில் குழந்தை ஓன்று உள்ளது.இந்த நிலையில் கணவனுக்கும்,மனைவிக்கும் நடந்த குடும்ப சண்டையில் கடந்த ஒருமாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.குழந்தை விக்னேஷ் வசம் உள்ளது.இந்த நிலையில் அகிலா கடந்த 24 ஆம் தேதி தீபாவளிஅன்று அதிகாலை 2.30மணியளவில் தென்காசி மங்கம்மா சாலையை சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் மோட்டார் சைக்கிளிலில் இருவரும் பேண்ட்,சர்ட் அணிந்து சென்று உள்ளார்.

கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது காரை முந்தி செல்ல முயன்ற போது இந்த ஜோடி சென்ற இருசக்கர வாகனம்  கொல்லம் நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக அரசு பஸ்சை ஓட்டி வந்த ராஜபாளையம் சேத்தூரை சேர்ந்த டிரைவர் லாரன்ஸ் சேவியர் ராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தீபாவளி அதிகாலையில் அகிலாவும்,விக்னேஷ்ம் எதற்காக கடையநல்லூர் பகுதிக்கு வந்தனர்.அகிலாவுக்கு அய்யப்பனோடு எப்படி பழக்கம் வந்தது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளி அதிகாலையில் சிட்டாக பறந்து பஸ் மோதி பலியான ஜோடி -காவல்துறை விசாரணை
 

Tags :

Share via