சரக்கு படத்தால் நாலு கோடிக்கு மேல் நஷ்டப்பட்ட மன்சூர் அலிகான்.
கேப்டன் பிரபாகரன் படத்தின் வில்லனாக அறிமுகமாகி தொடர்ச்சியாக படங்களில் நடித்து ஒரு வித்தியாசமான வில்லத்தனத்தை தன் உடல் மொழிகளால் காட்சிப்படுத்தியவர் மன்சூர் அலிகான் ..
மனதில் பட்டதை பளிச்சென்று பேசும் குணம் கொண்ட மன்சூர் அலிகான் பல்வேறு படங்களை தயாரித்தார். ராவணன் படத்தின் பொழுது விதவைகளை அழைத்து வந்தும்..... பூனைகளைகுறுக்கே விட்டும் தன்னுடைய பட பூஜையை ஆரம்பித்தவர்.
சமூக சீர்திருத்தத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட அவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். பல்வேறு கட்சிகளில் இணைந்து பணியாற்றி பின்பு அங்கிருந்து வெளியேறி தற்பொழுது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்கிற ஒரு கட்சியை நடத்தி வருகிறார்..
சமீபத்தில் திரிஷா குறித்து இவர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு மிகப் பெரிய ஒரு அதிர்வலையை உருவாக்கியது .அதனை தொடர்ந்து சென்சாரில் இருந்து பல்வேறு போராட்டத்தோடு அவருடைய சரக்கு படத்தை திரையரங்குக்கு கொண்டு வந்தார் .ஆனால், படம் அப்பொழுதே 5 கோடிக்கு மேல் செலவழித்து இருக்கிறேன் என்று சொன்னவர் .தற்பொழுது சரியான தியேட்டர் கொடுக்கப்படாமல் அரசியல் காரணங்களால்... தனது படத்தை ஓடவிடாமல்... நான்கு கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அதற்கு வாரிசு அரசியல் தான் காரணம் என்கிற கருத்தையும் செய்தியாளர்கள் மத்தியில் வைத்தார்.
Tags :