நெல்லையில் ரஜினிரசிகர்கள் சாலைமறியல் செய்ய முயற்சி

by Editor / 10-08-2023 09:54:47am
நெல்லையில் ரஜினிரசிகர்கள் சாலைமறியல் செய்ய முயற்சி


நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியான உள்ள நிலையில் நெல்லை மாநகரத்தில் மட்டும் ஆறு திரையரங்குகளில் திரயிடப்பட்டது.நெல்லை சந்திப்பு ராம்  திரையரங்க வாசலில் ரஜினி ரசிகர்கள்  பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..மேளதாளங்கள் அடிக்க போலீசார் தடை விதித்த நிலையில் ரஜினி கட்அவுட்டிற்கு அபிஷேகம் செய்ய முயற்சித்ததால்  ரசிகர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் உருவானது.தடையை மீறி பாலபிஷேகம் செய்ய முயன்ற இருவரை போலீசார் பிடித்து சென்றதால் பரபரப்பு  ஏற்பட்டது.மேலும் இதனைக்கண்டித்து திரையரங்கம் முன்புரசிகர்கள் சாலை மறியல் முயற்சிக்கு ஈடுபட சென்ற நிலையில் திரையரங்கு முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம்

Share via