தென்காசி பகுதியில் உள்ள இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்க விழா

by Editor / 13-07-2022 03:57:02pm
தென்காசி பகுதியில் உள்ள இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்க விழா

தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிகள் அளவிலான சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.

 இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

 தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்,

 தமிழகத்தில் தற்போது 2,500  பள்ளிகளில் கட்டிட வசதிகள் இல்லை என்பது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அது குறித்து முதலமைச்சர் தலைமையிலான கூட்டம் போட்டு, முதற்கட்டமாக பள்ளி கட்டிடங்களை கட்டுவதற்காக 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இது குறித்து உரிய முறையில் அரசாணை பிறப்பிக்க பட்ட போதும் இதுவரை ஒரு சில இடங்களில் மாணவர்கள் முகக வசம் அணியாமல் உள்ளனர். அது குறித்து தலைமை ஆசிரியர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

 மோசமான நிலையில் உள்ள கட்டிடங்களில் மாணவர்களை அமர வைக்கவோ அருகில் செல்லவோ விடக்கூடாது. மீறுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், பள்ளிகளின் நேரத்தை குறைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர்  கூறினார்.

தென்காசி பகுதியில் உள்ள இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்க விழா
 

Tags :

Share via