பெரும்பான்மை முஸ்லிம்கள் இந்து மதத்திலிருந்து வந்தவர்கள்

இந்தியாவில் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் இந்து மதத்தில் இருந்து வந்தவர்கள்தான் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், டிபிஏபி கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். காஷ்மீர் பண்டிட்டுகளில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிய காஷ்மீர் பள்ளத்தாக்கு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று குலாம் நபி கூறினார். அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ள அவர், அரசியலில் மதத்தில் தஞ்சம் புகுந்தவன் பலவீனமானவன் என்றார். ஆனால் இஸ்லாமியர்கள் வெளியில் இருந்து வந்துள்ளனர் என்று சில பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள் அது தவறு என்றும் குறிப்பிட்டார்.
Tags :