லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

by Staff / 19-08-2023 01:47:55pm
 லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

ஆவடியை அடுத்த பட்டாபிராம் கரிமேடு அண்ணா நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் உமாதேவி (வயது 33). இவர், குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சமையலராக வேலை செய்து வந்தார். நேற்று காலை உமாதேவி குன்றத்தூரில் உள்ள விடுதிக்கு வந்து சமையல் செய்துவிட்டு மொபட்டில் பட்டாபிராம் நோக்கி வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆவடி அடுத்த சித்துக்காடு அருகே மேம்பாலத்தில் சென்றபோது சாலையோரம் நின்ற லாரி மீது மொபட் மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த உமாதேவி மீது பின்னால் வந்த டிப்பர் லாரி ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய உமாதேவி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளின் டிரைவர்களான சேலத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் (45) மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த பாதுஷா (34) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories