கோடை வெயில் தாக்கத்தால் நீர்நிலைகளை தேடி சென்று குளிக்க செல்பவர்கள் இறக்கும் பரிதாபம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா கல்லூரணியில் உள்ள ஒரு கல் குவாரியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழப்பு எனத் தகவல். உடலைத் தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் தீவிரம்.இறந்தவர் கல்லூரணியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் காளிமுத்து (வயது 17) என்பது தெரியவந்துள்ளது கோடை வெயிலின் தாக்கத்தால் கடந்த சில தினங்களாக ஏராளமானோர் நீர்நிலைகளை தேடி குளிக்கச் சென்று உயிர் பலியாவது தொடர் கதையாகி வருகிறது இதனை தடுப்பதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட வேண்டும் என்பதே அனைவரும் கோரிக்கையாக உள்ளது
Tags :