கேரளாவில் கடந்தாண்டு சாதனையை முறியடித்த மது விற்பனை.

கேரளாவில் ஓணம் பண்டிகை நேற்று (செப்.5) கொண்டாடப்பட்டது. கடந்த 10 நாட்கள் ஓணம் விழா நடந்த நிலையில் மாநிலம் முழுவதும் ரூ.826 கோடிக்கு மது விற்பனை ஆனது. கடந்த ஆண்டு ரூ.776 கோடிக்கு மது விற்பனையானது. அதை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.50 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள் மட்டும் ரூ.137 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு அதே நாளில் ரூ.126 கோடிக்கு மது விற்பனையாகியது.
Tags : கேரளாவில் கடந்தாண்டு சாதனையை முறியடித்த மது விற்பனை.