தமிழ்நாடு காவலர் தினத்தையொட்டி உறுதிமொழி எடுத்த காவலர்கள்.
தமிழ்நாடு காவலர் தினத்தை ஒட்டி, சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 1859ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளான செப். 6, காவலர் நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி காவலர் பதக்கங்கள் வழங்குவது, கண்காட்சிகள், ரத்ததான முகாம்கள் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : தமிழ்நாடு காவலர் தினத்தையொட்டி உறுதிமொழி எடுத்த காவலர்கள்



















