கோவில் பணத்தில் வாகனங்கள் வாங்குவதா- அண்ணாமலை

நிர்வாகச் செலவுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை 12 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யும்போது, கோவில் உண்டியல் பணத்தை எடுத்து வாகனங்கள் வாங்கியிருக்கும் அமைச்சர் சேகர்பாபுவின் விதிமீறலை கண்டிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், 'கோவில் நிதியை அறநிலையத் துறையின் இதர செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது' என்று சென்னை உயர் நீதிமன்றமே கூறியிருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர்பாபு, கோவில் நிதியில் வாகனங்கள் வாங்கியதற்கு அந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
Tags :