சென்னையில் இன்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு

by Staff / 27-11-2023 11:18:48am
சென்னையில் இன்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சமூக நீதி காவலர் என போற்றப்படும் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழகத்தில் சிலை திறக்கப்படும் என ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.31 லட்சம் மதிப்பில் தமிழக அரசின் சார்பில் புதிதாக வி.பி.சிங்கின் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உத்திரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கலந்துக்கொள்ள உள்ளார்.

 

Tags :

Share via

More stories