தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சி

by Staff / 27-11-2023 11:45:10am
தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சி

தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி, காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என தி சவுத் ஃபர்ஸ்ட் என்ற செய்தி இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 57-62 தொகுதிகள் வரை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் எனவும், பிஆர்எஸ் கட்சிக்கு 41-46 தொகுதிகளும், எம்ஐஎம் கட்சிக்கு 6-7 தொகுதிகளும், பாஜகவுக்கு 3-6 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆண்டு ஆட்சியை முதல்வர் கேசிஆர் இழக்கக்கூடும்.

 

Tags :

Share via

More stories