பிரேசில் கொட்டி தீர்த்த கன மழையால் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி

by Staff / 03-04-2022 12:15:43pm
பிரேசில் கொட்டி தீர்த்த கன மழையால் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி

பிரேசில் கொட்டி தீர்த்தது கனமழையால்  நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடரால் அவசரநிலை அறிவிக்கப்பட்டு மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இரண்டு நாட்களாககொட்டி வரும் கனமழையால் பெரும் நகரான ரியோ டி ஜனேரோ சுற்றுவட்டார பகுதியில் பெருத்த சேதம் அடைந்து குளம் போல் காட்சியளிக்கின்றன.

குடியிருப்புகள் கட்டடங்கள் நீரில்  தத்ளிப்பதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

நிலச்சரிவில் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது ஏறத்தாழ தீவு போல மாறிய பகுதிகளில் மாட்டிக்கொண்ட அவர்களை மீட்கும் பணி தொடர்வதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனமழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் என 6 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்ததாகவும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo