செல்பி எடுத்த போட்டோவை.. வாட்ஸ்அப் ஸ்டிக்கராக மாற்றுவது எப்படி.?

by Editor / 22-05-2021 08:41:52am
செல்பி எடுத்த போட்டோவை.. வாட்ஸ்அப் ஸ்டிக்கராக மாற்றுவது எப்படி.?

வாட்ஸ் அப்பில் நண்பர்களுடன் உரையாடும் போது பலவிதமான ஸ்டிக்கர்களை நம்மால் அனுப்ப முடியும். அதில் உங்களது புகைப்படங்களையே நீங்கள் ஸ்டிக்கராக உருவாக்கி எப்படி அனுப்புவது என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

முதலில் உங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் ஸ்டிக்கர் மேக்கர் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும். இதில் புதிய ஸ்டிக்கரை உருவாக்க Create New Sticker 2 என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற நினைக்கும் போட்டோவைத் தேர்ந்தெடுத்து, அதன் பேக்ரவுண்டை டெலிட் செய்யவேண்டும். அதற்கு அந்த செயலியிலேயே கத்தரிக்கோல் போன்று ஒரு டூல் இருக்கும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

பின்னர் இதனை சேமித்துக்கொள்ளுங்கள். இதே போன்று குறைந்தது 3 ஸ்டிக்கர்களையாவது நீங்கள் உருவாக்கவேண்டும். அப்போது தான் இதனை வாட்ஸ்அப் செயலியுடன் இணைக்க முடியும். மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஸ்டிக்கர்களைத் தயாரித்த பின்பு sticker pack name என்பதை தேர்ந்தெடுத்து புதிய பெயர் கொடுத்து ஒரு பேக்கிபை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

தற்போது நீங்கள் உருவாக்கியிருக்கும் பேக்கினை வாட்ஸ்அப் உடன் இணைக்க Add to Whatsapp என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இந்த ஸ்டிக்கர்கள் அனைத்தும் தற்போது உங்களது வாட்ஸ்அப்பிற்கு வந்திருக்கும். இதனை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சியாக உரையாடலாம்.

 

Tags :

Share via