கல்லூரி மாணவன் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழப்பு முதல்வர் மதுரை வரும்போது போராட்டம் -இயக்குனர் கௌதமன் அறிவிப்பு.

by Editor / 02-01-2022 11:57:45pm
கல்லூரி மாணவன் மணிகண்டன்  மர்மமான முறையில் உயிரிழப்பு    முதல்வர் மதுரை வரும்போது போராட்டம் -இயக்குனர் கௌதமன் அறிவிப்பு.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மணிகண்டன் கடந்த டிசம்பர் 4 தேதி போலீசார் விசாரணைக்கு பின் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
 மாணவர் மணிகண்டன் போலீசார் தாக்கியதால் இறந்ததாக கூறி  அவரின் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து டிச.8 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி மணிகண்டனின் உடல் மறு உடற்கூறு ஆய்வு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
 அதில் மணிகண்டன் விஷமருந்தி இறந்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

 இதனையடுத்து அவரது உடல் நீதிமன்ற உத்தரவின்படி சொந்த ஊரான நீர்க்கோழி அந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு கட்சியினர், சமுதாய அமைப்பினர் மாணவர் மணிகண்டனின் குடும்பத்தில் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி அளித்து வருகின்றனர். மாணவர் மணிகண்டன் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் கௌதமன் கல்லூரி மாணவர் மணிகண்டன் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது... கல்லூரி மாணவன் மணிகண்டன் மரணத்தில் காவல்துறை தரப்பில் தவறு நடந்துள்ளது. இதனை மறைப்பதற்காக காவல்துறை திட்டமிட்டு செயல்பட்டு பட்டுள்ளது.

 மேலும் பிரேத பரிசோதனையில் உண்மை நிலவரத்தை மறைத்து விஷம் அருந்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மணிகண்டன் வழக்கை சிபிஐக்கு மாற்றி அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு இயக்குனர் கௌதமன் கோரிக்கை வைத்துள்ளார். 

மேலும் பொங்கல் திருநாளுக்குள் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஜல்லிக்கட்டை காண மதுரைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் வரும்போது அனைத்து சமுதாயத்தினரையும்,  தமிழ் குடி மக்களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via