அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

சென்னையில் ஏப்ரல் 25ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது. பாஜகவுடன் கூட்டணி உறுதியான பின்னர் இந்த கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது தொடர்பாகவும், 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags :