ஜெயக்குமார் மரணம் - காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் விசாரணை
நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக
நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரனிடம் திசையன்விளை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபி மனோகரன் தனக்கு பணம் தர வேண்டும் என ஜெயக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஜெயக்குமாரின் கடிதத்தின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட நிலையில் எம்.எல்.ஏவிடம் விசாரணை நடத்தப்படுகிறது.கடந்த 4ஆம் தேதி ஜெயக்குமாரின் உடல் பாதி எரிந்த நிலையில், அவரது வீட்டு தோட்டத்தில் மீட்கப்பட்டது.
Tags :