ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி
எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ள ஆர்.எம்.வீரப்பன், தகவல் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, உள்ளாட்சித் துறை, கல்வி மற்றும் இளைஞர் நலன் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
Tags :