விஜயகாந்தை பார்க்க - விரைந்த பிரபலங்கள்

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது உடல்நிலை பின்னடைவு அடைந்து வருவதாக மருத்துவமனை தரப்பில் தொடர்ந்து அறிக்கை வெளியாகிறது. இந்தநிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் விஜயகாந்தை நேரில் சென்று நலம் விசாரித்தனர். தற்போது அவர் பேச முடியாத நிலையில் இருப்பதால், குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளனர். விஜயகாந்த் இன்னும் செயற்கை சுவாச உதவியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags :