ஒடிசாவில் பலத்த மழை  இன்று புயல் கரையை கடக்கிறது

by Editor / 25-05-2021 08:04:57pm
 ஒடிசாவில் பலத்த மழை  இன்று புயல் கரையை கடக்கிறது



 அடுத்த 12 மணி நேரத்தில் 'யாஸ்' புயல் அதி தீவிர புயலாக மாறி, வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது .தமிழகத்தில் .6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்த நேரத்தில் மீண்டும் புயல் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை :
மே 26ஆம் தேதிஅதிகாலையில், 'யாஸ்' புயல் வடக்கு ஒடிசா, மேற்கு வங்க கரையோரமாக, சந்த்பலி-தம்ரா துறைமுகத்திற்கு அருகே சென்றடையும். பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே, பாலசோர் அருகே இது பிற்பகல் கரையைக் கடக்கும்
ஆந்திராவின் வடக்கு கடலோரப் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை,பெய்தது. பூரி, ஜகத்சிங்பூர், குர்தா, கட்டாக், கேந்திரபாரா, ஜெய்பூர், பத்ரக், பாலாசோர் உட்பட பல மாவட்டங்களில்  கன மழையும், அதிகன மழையும் பெய்யும். மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில்  இடங்களில் கன மழையும், அதி கன மழையும் பெய்யும்.மத்திய வங்கக் கடலின் பல பகுதிகளில் மணிக்கு 100-110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள்  கடலுக்குச் செல்ல வேண்டாம் என கூறியுள்ளது. 
இந்த நிலையில் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக, கன்னியாகுமரி, மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கோவை, தேனி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில்  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மே 26ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை கன்னியாகுமரி, மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வட தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்)தக்கலை (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம் ), நாகர்கோயில்(கன்னியாகுமரி) ஆகிய ஊர்களில் தானியங்கி மழைமானியில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

 

Tags :

Share via