பாலியல் வழக்கு: விமான படை  அதிகாரி கோவை  கோர்ட்டில் ஆஜர்

by Editor / 27-09-2021 05:45:00pm
பாலியல் வழக்கு: விமான படை  அதிகாரி கோவை  கோர்ட்டில் ஆஜர்


 விமானப்படை பெண் அதிகாரி பாலியல் பலாத்கார வழக்கில், கைது செய்யப்பட்ட விமானப்படை அதிகாரி கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார்.


கோவை ரெட் பில்டில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானியில் விமான படை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில், பங்கேற்ற விமான படை பெண் அதிகாரியிடம், சக அதிகாரியான அமித்தேஷ், 29, என்பவர், தகாத முறையில் நடந்துள்ளார்.அந்த பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில்,  அனைத்து மகளிர் போலீசார், அமித்தேஷ் மீது, பாலியல் பலாத்கார சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்து 2 நாள் காவலில் கடந்த 25ம் தேதி சிறையில் அடைத்தனர். 


காவல் நீட்டிப்புக்கு அமித்தேஷை, கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில்  மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதற்கிடையில் 'அமித்தேசை, விமானபடை விசாரணை அதிகாரிகள், தங்களிடம் ஒப்படைக்க கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வாதிட்டனர்.விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணும் கோர்ட்டில் ஆஜரானார்.

 

Tags :

Share via

More stories