தடுப்பூசிக்கும் கட்டுப்படாத டெல்டா பிளஸ்... தடுப்பூசி போட்டும் பலி வாங்கிய கொரோனா... தடுப்பூசி போட்டவரை பலி வாங்கிய டெல்டா பிளஸ் கொரோனா

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் டெல்டா பிளஸ் மரபணு மாற்ற கொரோனாவால் முதல் உயிர் பலி நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலைக்கு டெல்டா வகை தொற்றே காரணமாக அமைந்தது.
அதீத பரவல் தன்மை கொண்ட டெல்டா வகை தொற்று பாதிப்புக்கு இந்தியாவில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இது தற்போது மீண்டும் பிறழ்வடைந்து டெல்டா பிளஸ் என உருமாற்றம் பெற்றுள்ளதாகவும் இது டெல்டாவை காட்டிலும் மிகுந்த ஆபத்தானது எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் 3 ஆம் அலைக்கு டெல்டா பிளஸ் காரணமாக அமைய கூடும் எனவும் எச்சரித்தனர்.
இந்த நிலையில் மும்பையில் டெல்டா பிளஸ் மாறுபாட்டுக்கு 63 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்ட நிலையில் கடந்த மாதம் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அப்பெண் நீரிழிவு உட்பட பல இணை நோய்களால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
Tags :