தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

by Staff / 25-08-2024 12:03:02pm
தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

தமிழக வெற்றிக் கழக கொடியினை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில், 234 தொகுதிகளிலும் கொடியை ஏற்றவும், தங்களது இல்லங்களில் பறக்க விடவும் தாவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் கட்சி கொடியை ஏற்ற காவல்துறையினரிடம் உரிய அனுமதியை பெற வேண்டும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கட்சியின் மாநில மாநாடு மற்றும் கொள்கை விளக்கக் கூட்டத்தை செப்டம்பர் மாத இறுதியில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது

 

Tags :

Share via