கணவருடன் தொடர் சண்டை... மனைவி விபரீத முடிவு

சேலம்: ஏற்காடு அருகே கே.புத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் -மகேஸ்வரி தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரி (வயது 30) தோட்ட வேலை செய்துவந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மகேஸ்வரி நேற்று(ஏப்.16) மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags :